ஆறாம் முத்திரை - பூமி அதிர்ச்சி

முத்திரை - பாகன் ரோம் (வலுசர்ப்பம்) மீது இயேசுவின் தீர்ப்பு

வெளிப்படுத்தின விசேஷம் 6:12 - அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன், இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது, சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது, சந்திரன் இரத்தம் போலாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் 6:13 - அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 6:14 - வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று, மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.

வெளிப்படுத்தின விசேஷம் 6:15 - பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,

வெளிப்படுத்தின விசேஷம் 6:16 - பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்,

வெளிப்படுத்தின விசேஷம் 6:17 - அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள.

ஆகாய் 2:21-22 - நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி, ரரஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப் போடுவேன். குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.

எசேக்கியேல் 31:2 - மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

எசேக்கியேல் 31:3 - இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான், அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.

எசேக்கியேல் 31:16 - நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் (பார்வோன் / எகிப்து) விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன், அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர்குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.

பூமி அதிர்ச்சி = ராஜ்யங்கள் கவிழ்க்கப்பட்டது / அரசியல் புரட்சி

Emperor Constantine the Great defeated Diocletian's army in 312 A.D, which ended the persecutions. Diocletian (the Sun) was so panic stricken, he died insane. Constantine defeated emperors Maxentius and Licinius to become sole ruler of both west and east by 324 A.D. The Roman leaders (stars) fell and their power receded as a scroll.

எரேமியா 15:9 - ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள், அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள், இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் (யூதாவின் ராஜா - V4) அஸ்தமித்தது, வெட்கமும் இலச்சையும் அடைந்தாள், அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மத்தேயு 24:29 - அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

ஏசாயா 60:20 - உன் சூரியன் (King) இனி அஸ்தமிப்பதுமில்லை: உன் சந்திரன் மறைவதுமில்லை: கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்: உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

ஏசாயா 13:10 - வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும், சூரியன் உதிக்கையில் இருண்டுபோம், சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

எசேக்கியேல் 32:2 - மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன், நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.

எசேக்கியேல் 32:7 - உன்னை (எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்) நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன், சூரியனை (பார்வோன் - V2) மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும்.

எசேக்கியேல் 32:8 - நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஏசாயா 24:23 - அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும், அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்

ஏசாயா 24:21 - அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.

யோவேல் 2:10 - அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும், வானங்கள் அசையும், சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

யோவேல் 2:31 - கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

யோவேல் 3:15 - சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

அப்போஸ்தலர் 2:16 - தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது (present tense).

அப்போஸ்தலர் 2:20 - கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

ஆமோஸ் 8:1 - பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.

ஆமோஸ் 8:2 - அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காணுகிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவு காலம் வந்தது. இனி அவர்களை மன்னிக்க மாட்டேன்.

ஆமோஸ் 8:9 - அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,

ஆமோஸ் 8:10 - உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுக்களை புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமனாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எரேமியா 49:3 - எஸ்போனே, அலறு, ஆயி பாழாக்கப்பட்டது, ரப்பாவின் குமாரத்திகளே, ஓலமிடுங்கள், இரட்டை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள், அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடுங்கூடச் சிறைப்பட்டுப்போவான்.

ஏசாயா 15:3 - அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.

எசேக்கியேல் 27:31 - உனக்காக மொட்டையிட்டு இரட்டுடுத்திக்கொண்டு, உனக்காக மனங்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள்.

சங்கீதம் 81:3 - மாதப்பிறப்பிலும், நியமித்த காலத்திலும், நம்முடைய பண்டிகை நாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.

ஏசாயா 1:14 - உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது, அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது, அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.

ஏசாயா 24:23 - அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும், அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்

எசேக்கியேல் 32:7 - உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன், சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும்.

In Israel, the feast days were celebrated based on the rotation of moon. Hence, moon signifies the ecclessia or religious order of a kingdom.

ஏசாயா 34:4 - வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.

ஏசாயா 34:5 - வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது, இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ் செய்ய இறங்கும்.

ஏசாயா 34:6 - போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒருயாகமும், ஏதோம் தேசத்திலே மகா சங்காரமும் உண்டு, கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது, ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.

In this verse, the Holy Spirit paints the slaughter and ruin of the Edom (ஏதோமின் அழிவு), a kingdom of idols. Likewise in Revelation 6:13-14, the downfall of Pagan Roman Empire alongs with their idols is portrayed.

ஏசாயா 51:6 - உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள், வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்து போவார்கள், என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும், என் நீதி அற்றுப்போவதில்லை.

நாகூம் 3:12 - உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்தி மரங்களைப்போல் இருக்கும். அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.

ஓசியா 2:12 - என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி அவைகளைக் காடாய்ப்போகப் பண்ணுவேன், காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.

தானியேல் 2:35 - அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று. அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

தானியேல் 2:44 - அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

எரேமியா 51:24-25 - பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 2:18 - விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.

ஏசாயா 2:19 - பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.

ஏசாயா 2:20 - பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,

ஏசாயா 2:21 - மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன்விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான்.

யாத்திராகமம் 12:12 - அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும் முதற் பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன். நானே கர்த்தர்.

எண்ணாகமம் 33:4 - அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன் பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள், அவர்கள் தேவர்களின் பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினானர்.

In truth, as the Lord, when he was about to conduct ancient Israel out of Egyptian bondage, is said to have exercised Judgement on all the gods of the Egyptians, so here, when he was about to deliver the Christian people from Roman tyranny, he exercised Judgement on the gods of the Romans.

The event of this seal is a wonderful commotion of heaven and earth, by which that marvellous change of the heathen Roman state, by Constantine the Great and his successors; All the gods of the Gentiles, shaken from their heaven, their pontiffs and their priests degraded from their offices, unhallowed, cast down, and forever deprived of their revenues; the temples, and images of demons throughout the whole Roman world ruined, overthrown, burnt, and demolished.

And this is the first completion of that victory of Jesus, of which the foundation was laid in the first seal; to which the seals which have preceded it have been subservient.

The demolition of shrines and temples was effected under the authority of emperor Theodosius I. For Constantine the Great only shut up the temples of the gods; he did not destroy them, except at Constantinople and the adjoining places.

Julian the Apostate opened them again. But this emperor Theodosius ordered them to be utterly demolished. He dissolved the order of the Vestal Virgins (equivalent to Catholic nuns) in Rome.

Galerius, Maximin, and Licinius, made even a public confession of their guilt, recalled their decrees and edicts against the Christians, and acknowledged the just Judgements of God and of Christ in their own destruction.

About one half of the Roman Empire turned Christians in the time of Constantine the great and his sons.

At the opening of the sixth seal, that which letteth (2 Thessalonians 2:7) is taken out of the way, namely the heathen Roman Empire.

2 தெசலோனிக்கேயர் 2:6-7 - அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.

2 Thessalonians 2:6-7 - And now you know what is restraining, that he may be revealed in his own time. For the mystery of lawlessness is already at work; only He who now restrains will do so until He is taken out of the way.

The heathen roman empire (restrainer) was removed to make way for the little horn antichrist (Papacy) to grow slowly.