தலைமை போதகர் என்கிற தனி மனித ஆதிக்கம் வசனத்தில் இல்லை

இந்த வசனம் பவுல் எபேசு சபையின் மூப்பர்களை அழைத்ததாகக் கூறுகிறது, (ஒரு போதகர் அல்லது ஒரு பாஸ்டரை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை), ஆனால் கண்காணியாக அல்லது போதகராக இருப்பது மூப்பர்களின் வேலை.

இந்த வசனம் சபையின் தலைமை போதகர் மட்டுமே ஆயன் / பிஷப் என்ற கருத்தை மறுக்கிறது. எபேசுவில் உள்ள சபையின் ஒரு தலைமை போதகரை பற்றி எந்த குறிப்பும் இல்லை.

ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை (பன்மை) நியமித்ததை கவனியுங்கள். ஒவ்வொரு சபையிலும் ஒரு தலைமை போதகர் / தலைமை பாஸ்டர் நியமிக்கப்படுவது பற்றி குறிப்பிடப்படவில்லை.

இந்த வசனம் எருசலேமில் ஒரு சபை இருந்ததாக என்று கூறுகிறது, ஆனால் மூப்பர்கள் பலர். எருசலேம் சபையின் ஒற்றை தலைமை போதகர் / தலைமை பாஸ்டர் குறிப்பிடப்படவில்லை. அப்போஸ்தலர்கள் இறந்தபோது, ​​மூப்பர்கள் மட்டுமே கண்காணிகளாக இருந்தார்கள்.

பிலிப்பியில் உள்ள சபையில் கண்காணிகள் / ஆயர்கள் (பன்மை) அல்லது உதவிக்காரர்கள் இருந்தனர் என்பதை கவனியுங்கள். இவர்கள் சபையின் மூப்பர்கள். பிலிப்பியர் சபையில் ஒற்றை தலைமை போதகர் / தலைமை பாஸ்டர் குறிப்பிடப்படவில்லை.

மீண்டும் மூப்பர்கள் (பன்மை).

ஒரு சபை, பல மூப்பர்கள் அல்லது சபையின் கண்காணிகள்.

பவுல் தெசலோனிக்கா சபையில் பேசுகிறார், அவர்களுடைய (பன்மை) கிரியைகளினிமித்தம் அவர்களை (பன்மை) மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி (பன்மை) கூறுகிறார். இது தெசலோனிக்கா சபையில் உள்ள மூப்பர்களை பற்றி பேசுகிறது. எந்த தலைமை போதகரும் குறிப்பிடப்படவில்லை.

முதன்மை என்றால் முதல் இடம் என்று பொருள். தியோத்திரேப்பு சபையில் மற்ற மூப்பர்களை காட்டிலும் முதன்மையாயிருக்க விரும்புகிறான். அவன் சபையை நடத்தி வந்தான், சபையில் மற்ற சகோதரர்களை ஏற்றுக்கொள்வதை தடைசெய்தான், மேலும் அவனை எதிர்க்கும் மக்களை வெளியேற்றினான். இந்த சபை ஒரு மனிதனால் நடத்தப்பட்டது போல் தெரிகிறது, ஆனால் யோவான் அதைக் கண்டித்தான்.

இன்று, ஒரு போதகர் சபையில் தலைமை பாஸ்டர் என்கிற ஒரு பதவியை வைத்திருக்கிறார், அது அவரை முதன்மையான இடத்தில் வைக்கும்.

ஒரு போதகர் நல்ல மனிதராக இருக்கலாம், அல்லது அவர் ஒரு கெட்ட மனிதராக இருக்கலாம், ஆனால் தலைமை பாஸ்டர் என்கிற அந்த முதன்மையான நிலை தானாகவே அவரை முன்னுரிமைக்கு உட்படுத்துகிறது. இந்த முதன்மையான நிலை வேதத்தில் இல்லை.

இப்போது, ​​கேள்வி என்னவென்றால், உள்ளூர் சபையில் தலைமை பாஸ்டர் என்கிற ஒரு நிலை இருக்க வேண்டுமா?. அது தவறு என்று வேதம் கற்பிக்கிறது.

இவ்வாறு சபையில் உள்ள அனைத்து மூப்பர்களும் ஒரே மட்டத்தில் உள்ள கண்காணிகளாக உள்ளனர். தலைமை பாஸ்டர் என்ற பட்டம் வேதத்தில் எந்த இடத்திலும் இல்லை. நம்முடைய பிரதான ஆசிரியர் இயேசு ஒருவரே.

மீண்டும் மூப்பர்கள் (பன்மை).