ஏழாம் எக்காளம்

வெளிப்படுத்தின விசேஷம் 11:15 - ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின, அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

வெளிப்படுத்தின விசேஷம் 11:16 - அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:

வெளிப்படுத்தின விசேஷம் 11:17 - இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:18 - ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது (கோபாக்கினை கலசங்கள்), மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:19 - அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது, அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

Sequence

எக்காளங்கள் தீர்ப்பு காலம்
முதலாம் எக்காளம் ரோம் வீழ்ச்சி (Alaric) கி.பி 395 - 410
இரண்டாம் எக்காளம் ரோம் வீழ்ச்சி (Genseric) கி.பி 425 - 455
மூன்றாம் எக்காளம் ரோமானிய பேரரசின் மீது அட்டிலாவின் படையெடுப்பு கி.பி 434 - 468
நான்காம் எக்காளம் மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி கி.பி 476 - 756
ஐந்தாம் எக்காளம் அரேபியர் படையெடுப்பு கி.பி 756 - 1055
ஆறாம் எக்காளம் கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி கி.பி 1055 - 1453 - 1789
ஏழாம் எக்காளம் 7 கலசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது கி.பி 1789 முதல்

Seven Bowls