சின்ன கொம்பு அந்திகிறிஸ்து - தானியேல் 7

அந்திகிறிஸ்து பற்றிய வசனங்களை ஆராயலாம்

தானியேல் 2:1 - நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான். அதினாலே அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

தானியேல் 2:31 - ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது. அது உமக்கு எதிரே நின்றது. அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

தானியேல் 2:32-33 - அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையம் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.

Image

தானியேல் 2:34 - நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

தானியேல் 2:35 - அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று. அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

தானியேல் 2:38 - ...பொன்னான அந்தத் தலை நீரே (பாபிலோன்).

தானியேல் 2:39 - உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறோரு ராஜ்யம் தோன்றும். பின்பு பூமியெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும்.

தானியேல் 2:40 - நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும். இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னா பின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.

  உலோகம்   ராஜ்யம்   வசனங்கள்
  தங்கம்   பாபிலோன்   தானியேல் 2:38
  வெள்ளி   மேதியா பெர்சியா   தானியேல் 2:39; 7:5; 8:20; 5:26-31
  வெண்கலம்   கிரீஸ்   தானியேல் 2:39; 7:6; 8:21
  இரும்பு   ரோம ராஜ்யம்   தானியேல் 2:40; 7:7, லூக் 2:1

தானியேல் 2:38 - ...பொன்னான அந்தத் தலை நீரே (பாபிலோன்).

தானியேல் 8:20 - நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்.

தானியேல் 8:21 - ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா. அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா (Alexander the Great).

லூக்கா 2:1 - அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் (ரோம ராஜ்யம்) கட்டளை பிறந்தது.

தானியேல் 7:3 - அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.

தானியேல் 7:4 - முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது. அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது. மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

தானியேல் 7:5 - பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன். அது ஒரு பக்கமாய்ச் சாய்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. எழும்பி வெகு மாம்சம்தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.

தானியேல் 7:6 - அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன். அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது. அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது. அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.

Beasts


தானியேல் 7:7 - அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன். அது கொடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது. அதற்குப் பெரிய இரும்புப்பற்கள் இருந்தது. அது நொறுக்கிப் பட்சித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது. அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

தானியேல் 7:23 - அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்.

மிருகம் = ராஜ்யம்

  மிருகம்   உலோகம்   ராஜ்யம்   வசனங்கள்
  சிங்கம்   தங்கம்   பாபிலோன்   தானியேல் 2:38, 7:4
  கரடி   வெள்ளி   மேதியா பெர்சியா   தானி 2:39; 7:5; 8:20; 5:26-31
  சிவிங்கி   வெண்கலம்   கிரீஸ்   தானியேல் 2:39; 7:6; 8:21
  பயங்கரமான மிருகம்   இரும்பு    ரோம ராஜ்யம்   தானியேல் 2:40; 7:7

தானியேல் 2:38 - ...பொன்னான அந்தத் தலை நீரே (பாபிலோன்).

தானியேல் 8:20 - நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்.

தானியேல் 8:21 - ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா. அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா.

லூக்கா 2:1 - அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் (ரோம ராஜ்யம்) கட்டளை பிறந்தது.

தானியேல் 7:8 - அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.

தானியேல் 7:11 - அப்பொழுது நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது. அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தானியேல் 7:24 - அந்தப் பத்தக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம். அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான். அவன் முந்தினவர்களைப் பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,

தானியேல் 7:25 - உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான். அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.


சின்ன கொம்பு அந்திகிறிஸ்து அடையாளங்கள்


தானியேல் 7:8 - அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று....

அந்திகிறிஸ்து சின்ன கொம்பு என்று உருவகப்படுத்தப்படுகிறான்.

கொம்பு = ராஜா (தானியேல் 7:24; 8:5,21,22).

தானியேல் 7:24 - அந்தப் பத்தக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்.

தானியேல் 8:21 - ....அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா.

அந்திகிறிஸ்துவை நாம் அடையாளம் காண ஒரு சிறிய ராஜ்யத்தை பார்க்க வேண்டும்.

வத்திக்கான் நகரம் உலகின் மிகச் சிறிய நாடு.

Vatican

தானியேல் 7:8 - அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று....

10 கொம்புகள் மத்தியில் சிறிய கொம்பு உள்ளது.

தானியேல் 7:7ல் உள்ள 10 கொம்புகள் கத்தோலிக்க ரோம சாம்ராஜ்யத்தில் (மேற்கத்திய & கிழக்கத்திய) உள்ள 10 ராஜ்யங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

இந்த சின்ன கொம்பை / ராஜ்யத்தை நாம் ஐரோப்பாவில் (ரோம ராஜ்யத்தில்) பார்க்க வேண்டும்.

வத்திக்கான் நகரம் மேற்கு ஐரோப்பாவில் உள்ளது.

தானியேல் 7:24 - அந்தப் பத்தக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம். அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்....

போப் (சின்னக் கொம்பு) கி.பி 538-545ல் மற்ற 10 கொம்புகளுக்குப்பிறகு உருவாகியது.

தானியேல் 7:8 - அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது....

தானியேல் 7:24 - ...அவன் முந்தினவர்களைப் பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,

சின்னக்கொம்பு முன்று கொம்புகளைப் (ராஜ்யங்களை) வேறுடன் பிடுங்கிப்போட்டது.

தம்முடைய கத்தோலிக்க ஆளுகைக்குப் பணிய மறுத்த 3 ராஜ்யங்களை ரோமன் கத்தோலிக்க சபை அழித்துப்போட்டது.

பேரரசர் ஜஸ்டினியன் உதவியுடன் போப் 10 ராஜ்யங்களில் 3 ராஜ்யங்களை மேற்கொண்டு அழித்துப் போட்டார். ஹெருளை (Heruli), ஆஸ்டோகோத் (Ostrogoths), வாண்டல் (Vandals) என்ற ராஜ்யங்களே அவை.

போப் 3 கொம்புகளை வேறுடன் பிடுங்கி அழித்துப் போட்டான்.

Heruli
Ostrogoths
Gothic War (535–554)
Vandals
Vandalic War
Emperor Justinian

தானியேல் 7:24 - ...அவன் முந்தினவர்களைப் பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,

போப் = கத்தோலிக்க மத தலைவர் / வத்திக்கான் ராஜா

Papacy = Church & State / சபை & நாடு.

மத-அரசியல் அமைப்பு.

1 தீமோத்தேயு 4:1 - ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.

1 தீமோத்தேயு 4:2-3 - விவாகம்பண்ணாதிருக்கவும், விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.

Papal Throne

தானியேல் 7:8 - ...இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.

The Papacy has one man, the Pope, as its head speaking on behalf of the Catholic Church.

The pope calls himself Episcopus Episcoporum, the Overseer of Overseers (கங்காணிகளுக்கு கங்காணி), Bishop of Bishops (ஆயர்களுக்கு ஆயர்), Father of Fathers (பிதாக்களுக்கு பிதா).

தானியேல் 7:8 - ...இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.

தானியேல் 7:11 - அப்பொழுது நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது....

தானியேல் 7:25 - உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்....

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 - பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது, அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

வத்திக்கானின் தூஷணம்

  • எல்லாருடைய பாவங்களை மன்னிக்க அதிகாரம் (Confession) - மாற்கு 2:7
  • தேவனுக்கு தன்னை சமமாக்குவது (Vicar of Christ) - யோவான் 10:33

1. Dignity and Duties of the Priest என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி (பக்கம் 34)

கத்தோலிக்க குரு என்பர் இரட்சகர் இயேசுவின் ஸ்தானத்தில் இருப்பவர். அந்த ஸ்தானத்திலிருப்பவர் Ego te absolvo என்று சொல்வதன் மூலம் ஒருவருடைய பாவங்களை நீக்கி மன்னிக்கிறார். இந்தப் பெரிய வல்லமையை இயேசு தம்முடைய பிதாவிடமிருந்து பெற்று அதனை கத்தோலிக்கப் குருக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

2. லேரி டைரிக் (Larry Derycke) எழுதியுள்ள Satan, The Anti-Christ And the False Prophet என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

தலைப்பு: வெனிஸ் நகரத்தின் ஆயர்
ரோம் நகரத்தின் பிஷப் இயேசுவின் பிரதிநிதி மட்டுமா, இல்லை அவர்தான் இயேசு கிறிஸ்து - மாம்சத்தில் மறைந்திருக்கும் இயேசு இவரே. ரோமாபுரியின் பிஷப் பேசுவாரா என்றால் இவரல்ல இயேசுவே இவராகப் பேசுகிறார்.

3. The Great Encyclical Letters of Leo XIII ஒரு பகுதி (பக்கம் 304)

Chapter: The Reunion of Christendom
நாங்கள் உலகத்தில் சர்வ வல்ல தேவனுடைய ஸ்தானத்தை வகிக்கிறோம்.

தானியேல் 7:22 - இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்....

தானியேல் 7:25 - உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி , காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான். அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

கத்தோலிக்க சபை லட்சக்கணக்கான உண்மைக் கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்று குவித்தது.

இருண்டகாலம் என்று அழைக்கப்படும் கி.பி 538-1798ம் ஆண்டு வரை ரோமன் கத்தோலிக்க சபை கிட்டத்தட்ட 5 கோடி உண்மைக்கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் வேதப்புரட்டர்கள் என்று கூறிக் கொன்று குவித்தது.

மூன்று சித்திரைவதை அருங்காட்சியகம் ஐரோப்பாவில் உள்ளது. இதில் போப்பாண்வர் காலத்தில் எவ்வளவு கொடூரமாகக் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்பது படமாக விளக்கப்பட்டுள்ளது.

The Torture Museums provides a vivid image of the painful painful Inquisition Torture unleashed on Protestants by the Pope.

Catholic Church Torture Museum in Amsterdam
Instruments of Torture employed by Pope
Catholic Church Torture Museum in Carcassonne

Apology of Pope Francis
Inquisition
Saint Bartholomew's Day Massacre
Medieval Inquisition
Roman Inquisition
Spanish Inquisition
Portuguese Inquisition
Peruvian Inquisition
Mexican Inquisition
Waldensians
Albigensian Crusade
Catharism

சித்திரவதை நாற்காலி

Torture Chair

சித்திரவதைக்கு உபயோகித்த கருவிகள்

Torture Instrument

மண்டையோடை உடைக்கும் கருவி

Skull Crusher

மனித உடலை இரண்டாக வெட்டிப்போடும் இரம்பம் கருவி

Torture Saw

நாக்கை வெட்டியெடுக்க உதவும் கருவி

Tongue Cutter

தானியேல் 7:25 - உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான். அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

தானியேல் 2:21 - அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர். ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

போப் பிரமாணங்களை மாற்றினார்.
பத்துக்கட்டளைகளிலுள்ள 2ம் கட்டளையை போப் அகற்றிவிட்டார். கத்தோலிக்க மறைக்கல்வியில் (Catechism) இரண்டாம் கற்பனையான விக்கிரகத்தை உருவாக்கக்கூடாது அதை வணங்கக்கூடாது என்பதை நீக்கி விட்டு பத்தாம் கற்பனையை 2 கற்பனைகளாகப் பிரித்து இந்த அவலட்சணமான செயலை வாடிகன் இணையதளத்திலேயே வெளியிட்டிருக்கிறார்கள். இன்றளவும் இந்த அவலட்சணம் அப்படியேதான் உள்ளது.

Ten Commandments in Vatican website.

போப்பாண்டவர் காலத்தை மற்றினார்: Gregorian Calendar
இன்று நாம் பின்பற்றும் கிரகோரியன் கேலண்டரைத் தந்தத கிரகோரி என்ற போப்பாண்டவரே. இந்த கேலண்டர் மாற்றத்தினால் அக்டோபர் 4, 1582க்குப் பிறகு அக்டோபர் 15, 1582 என்ற தேதி வந்தது. 10 நாட்கள் காணாமல்போனது.

Calendar

தானியேல் 7:25 - உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான். அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

King Nebuchadnezzar driven out of the Kingdom for 7 Times (Years)

ஒரு காலம் = ஒரு வருடம்

தானியேல் 4:23 - இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள். ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும், வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக. ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.

தானியேல் 4:32 - மனுஷரினின்று தள்ளப்படுவாய். வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய். மாடுகளைப்போல் புல்லை மேய்வாய். இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது.

  காலம்   வருடங்கள்   மாதங்கள்   நாட்கள்
  ஒரு காலம்   1 வருடம்   12 மாதம்     360 நாட்கள்
  காலங்கள்   2 வருடம்   24 மாதம்     720 நாட்கள்
  அரைக்காலம்   0.5 வருடம்   6 மாதம்     180 நாட்கள்
  மொத்தம்   3.5 வருடம்   42 மாதம்   1260 நாட்கள்

ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் = 1260 தீர்க்கதரிசன நாட்கள்

எசேக்கியேல் 4:6 - நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும், ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

எண்ணாகமம் 14:34 - நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.

ஆதியாகமம் 5:5 - ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான்.

ஆதியாகமம் 6:3 - அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.

ஆதியாகமம் 25:7 - ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.

ஆதியாகமம் 5:5, 5:8, 5:11, 5:14, 5:17, 5:20, 5:23, 5:27, 5:31, 6:3, 25:7

ஒரு தீர்க்கதரிசன நாள் = ஒரு வருடம்

ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் = 1260 ஆண்டுகள்

கத்தோலிக்க சபையின் போப்பாண்டவர்கள் ஆட்சிசெய்த காலம் 1260 வருடங்கள். கி.பி 538 - கி.பி 1798.

கி.பி 538ம் ஆண்டில் பேரரசர் ஜஸ்டினியன் ஒரு ஆணை மூலம் போப்பாண்டவர்தான் அத்தனை சர்ச்சுகளுக்கும் இனி தலைவர் என்று உத்திரவு பிறப்பித்தமையால் போப்பாண்டவருக்குச் , சர்ச், மத மற்றும் மக்கள் ஆட்சி அதிகாரங்கள் வரப்பெற்றது.

கி.பி 1798ல் நெப்போலியன் என்ற மன்னரின் படைகள் ரோமபுரிக்குள் நுழைந்து போப் பையஸ் VI (Pope Pius VI) என்ற போப்பாண்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. போப்பாண்டவரின் ஆட்சி இதனுடன் முடிவுக்கு வந்தது.

Papacy

தானியேல் 7ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சின்னக் கொம்பு குறித்த அத்தனை அடையாளங்களும் அப்படியே போப்பாண்டவரிடம் காணப்படுகிறது.

2 தெச 2 & வெளிப்படுத்தின விசேஷம் 13, 17 & 18 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள அந்திக்கிறிஸ்துவின் அத்தனை அடையாளங்களும் பாபல் என்றழைக்கப்படும் போப்பாண்டவரிடம் காணப்படுகிறது.



வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.