கத்தோலிக்க திருப்பலி வேதத்தில் இல்லை
இயேசுவை நிரந்தரமாக திருப்பலியில் பலியிடுவது தேவையா? தேவனுடைய வார்த்தையுடன் இந்த கோட்பாட்டை அளவிடுவோம்..
எபிரேயர் 9:12 - வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
எபிரேயர் 9:25 - பிரதானஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்தஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
எபிரேயர் 9:26 - அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே. அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
எபிரேயர் 9:28 - கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரேயர் 10:10 - இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
எபிரேயர் 10:12 - இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
எபிரேயர் 10:14 - ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
எபிரேயர் 10:18 - இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.
யோவான் 19:30 - இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
நற்கருணை உட்கொள்வது ஆண்டவர் இயேசுவின் கட்டளை. நாம் கர்த்தருடைய இராப்போஜனத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் (லூக்கா 22:19, 1 கொரிந்தியர் 11:24-25).
இருப்பினும், கத்தோலிக்க நற்கருணை கொண்டாட்டம் கர்த்தருக்கு அருவருப்பானது.
1 கொரிந்தியர் 10:16 - நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
1 கொரிந்தியர் 10:17 - அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 10:18 - மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள். பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?
கத்தோலிக்க சபை பலிபீடங்களில் என்ன இருக்கிறது? அருவருப்பான சிலைகள் 1 கொரிந்தியர் 10:20 & வெளிப்படுத்தின விசேஷம் 9:20 படி பிசாசுகள்.
சிலைகளுக்கு (பிசாசுகள்) முன்னால் பலியிடப்பட்ட நற்கருணை சாப்பிடுபவர்கள் பேய்களுடைய பலியில் பங்கு கொள்கிறார்கள்.
1 கொரிந்தியர் 10:19 - இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?
1 கொரிந்தியர் 10:20 - அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன். நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
1 கொரிந்தியர் 10:21 - நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே. நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
1 கொரிந்தியர் 10:14 - ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
இராப்போஜனத்தில் பங்கேற்பது எப்படி?
சிலைகளின் முன் அப்ப ரசம் எடுப்பதற்கு பதிலாக, இராப்போஜனத்தை வீட்டிலேயே கொண்டாடலாம்.
அப்போஸ்தலர் 2:46 - ...வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
நான் ஒரு குருவோ ஆசாரியனோ அல்ல, நான் அப்பத்தை தொடலாமா?
ஒவ்வொரு விசுவாசியும் ஒரு ஆசாரியன் என்று வேதம் கூறுகிறது.
1 பேதுரு 2:9 - நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:6 - நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:10 - எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:6 - முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான், இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை, இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
1 தீமோத்தேயு 4:1 - ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.
1 தீமோத்தேயு 4:2 - விவாகம்பண்ணாதிருக்கவும்,
1 தீமோத்தேயு 4:3 - விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
திருமணத்தைத் தடைசெய்யும் ஒரே சபை கத்தோலிக்க சபை மட்டுமே. 1 தீமோ 4: 1-3-ன் படி, கத்தோலிக்க சபை பிசாசுகளின் உபதேசங்களைக் பின்பற்றி திருமணத்தைத் தடை செய்கிறது.
கத்தோலிக்க குருத்துவம் இயேசுவுக்கு எதிரானது.
குருக்களின் திருமணத்த்தை தடை செய்யும் கத்தோலிக்க சபை பிசாசுகளின் உபதேசங்களை பின்பற்றுகிறது.
Pope = Pontifex Maximus / Rex Sacrorum Catholic Priest = Flamen Catholic Nun = Vestal Virgin College of Cardinals = College of Pontiffs Feast of the Purification = Lupercalia Calendar of saints = dies natalis Infant Baptism (Naming Ceremony) = dies lustricus All Souls Day = Parentalia / Feralia All Saints Day = Lupercalia Assumption of Mary = Festival of goddess Diana (Nemoralia) Christmas = Birthday of the Unconquered Sun (Dies Natalis Solis Invicti) Easter = Pagan festival of Eostre / March equinox
வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
- விக்கிரக ஆராதனை செய்தமைக்காக இயேசுவிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள்.
- இயேசு மீது மட்டும் உங்கள் விசுவாசத்தை வையுங்கள்.
- இயேசுவின் நாமத்தில் தண்ணீரில் முழுகி பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.
- உங்கள் வீட்டிலேயே ஒரு சபை கூடுகையை ஆரம்பியுங்கள். அல்லது ஏதாவது வீட்டில் கூடும் சபைக்குச் செல்லுங்கள்.
- இயேசுவைக்குறித்த சுவிசேஷத்தை இயேசுவை அறியாத ஜனங்களுக்கு அறிவியுங்கள்.
- வேத வசனங்களை தினமும் படியுங்கள். ஆய்வு செய்யுங்கள். தினமும் இயேசுவிடம் ஜெபத்தின் மூலம் பேசுங்கள்.
- இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.
- தசமபாகம் கொடுப்பதை உடனடியாக நிறுத்துங்கள். வசனத்தின்படி ஏழை ஜனங்களுக்குச் சாப்பாடு கொடுங்கள்.
- ஆவியின் கனிகள் உங்களிடமிருந்து வெளிப்படட்டும். (கலாத்தியர் 5:22-23)