இயேசுவின் மூன்று பட்டங்கள்

இயேசுவின் மூன்று பட்டங்களை அந்திகிறித்து தனக்காக எடுத்துக்கொள்ளுவான்.

மத்தேயு 12:41 - யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

யூதர்களைப் பொருத்தவரை யோனா ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசியாவார். ஏனென்றால் யோனா ஒரு சில நாட்களோ நினைவே பட்டணத்தில் மனந்திரும்புதல் குறித்துப் பிரசங்கம் பண்ணினான் (யோனா 3:4), அந்தப் பிரசங்கத்திலேயே அந்த நினைவே நகரமே இரட்டுடுத்தி மனந்திரும்பியது (யோனா 3:5-7).

இயேசு தாம் யோனாவைக்காட்டிலும் பெரியவர் என்று யூதர்களிடம் தம்மை அடையாளப்படுத்தினார். அதாவது யூதர்கள் மிகவும் மதிக்கும் தீர்க்கதரிசியான யோனாவை விடத் தாம் பெரிவர் என இயேசு தெளிவாகத் தம்மை அடையாளப்படுத்தினார். (மத்தேயு 12:41).

தாமே தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் மேலான தீர்க்கதரிசி என இயேசு தம்மை அடையாளம் காட்டியுள்ளார் (உபாகமம் 18:18).

மத்தேயு 12:42 - தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.

சாலமோன் ராஜாதான் ஞானத்திலும் சம்பத்திலும் இஸ்ரவேலில் தலைசிறந்த ராஜா. (1 ராஜா 3:12-13)

யூதர்களைப் பொருத்தவரை சாலமோன்தான் இஸ்ரவேலின் ராஜாக்களுள் பெரியவன்.

தாம் சாலமோனிலும் பெரியவர் என்பதை இயேசு அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

இயேசு ராஜாக்களிலெல்லாம் சிறந்தவர் மற்றும் பெரியவர். (வெளி. 19:16 – ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்)

King

மத்தேயு 12:6 - தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எபிரேயர் 5:10 - மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.

இயேசு தாம் மகாப்பிரதான ஆசாரியர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். (எபிரேயர் 5:6; 6:20; 7:15,17,21)

ஏசாயா 14:12 - அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே (Lucifer), நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

ஏசாயா 14:13 - நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

ஏசாயா 14:14 - நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

ஏசாயா 14:15 - ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

எசேக்கியேல் 28:1 - கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எசேக்கியேல் 28:2 - மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

2 தெசலோனிக்கேயர் 2:4 - அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

தானியேல் 11:36 - ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான். கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும். நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

பவுல் அப்போஸ்தலன் அந்திக்கிறிஸ்துவைக் கேட்டின் மகன் என வருணிக்கிறான் (2 தெச. 2:3). இயேசு, தம்மைக் காட்டிக்கொடுக்கவிருக்கிற யூதாஸ் ஸ்காரியோத்தைக் குறித்துக் குறிப்பிடும்போது இதே வார்த்தைகளை உபயோகித்துள்ளார் (யோவான் 17:12).

யோவான் 17:12 - நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன், நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன், வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

2 தெசலோனிக்கேயர் 2:3 - எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

யூதாஸ் ஸ்காரியோத் இயேசுவுக்கு அயலாரிடத்திலிருந்து வந்த எதிரியல்ல. அவன் இயேசுவின் சீஷர்களுக்குள்ளே, அதாவது அப்போஸ்தலர்கள் எனப்பெயர் கொடுக்கப்பட்டவர்களுக்குள் இருந்து எழும்பிய துரோகி.

யூதாஸ் ஒரு போலியான நண்பன். அதாவது நண்பன் வடிவில் எழும்பிய எதிரி, துரோகி.

இதேபோல அந்திக்கிறிஸ்துவும் ஒரு நயவஞ்சகமான போலி ஆகும். இவன் தன்னை எதிரியாகக் காண்பிக்க மாட்டான். ஆனால் இவன் இயேசுவுக்கு எதிரி. நயவஞ்சகன்.

Counterfeit

1. போப் தம்மை Vicar of Christ என்று அழைத்துக் கொள்வதன் மூலம் தன்னைத் தீர்க்கதரிசி என பிரகண்டனம் செய்துள்ளார். இயேசுவுக்குப் போட்டியாக இந்தப் பட்டத்தைப் போப் அபகரித்துள்ளார்.

2. போப்புக்குப் பெயர் Pontifex Maximus இதன் அர்த்தம் என்னவென்றால் பிரதான ஆசாரியர். இயேசுதான் நமக்குப் பிரதான ஆசாரியர். இயேசுவின் இந்தப் பட்டத்தைப் போப் அபகரித்துள்ளார்.

3. போப் வாட்டிகன் நகர் மற்றும் தேசத்தின் ராஜா. கிறிஸ்துவத்துக்குத் தலைவர் என்று சொல்லிக்கொண்டு இந்த வாடிகனின் ராஜா என்ற பட்டத்தையும் தரித்துக்கொண்டுள்ளார். இதன் மூலம் போப் இயேசுதான் ராஜாதி ராஜா என்ற அவருடைய ராஜரீகத்தை மறுதலித்துள்ளார்.

Papal supremacy is the doctrine of the Roman Catholic Church that the Pope, by reason of his office as Vicar of Christ and as the visible foundation and source of unity, and as pastor of the entire Christian Church, has full, supreme, and universal power over the whole Church, a power which he can always exercise unhindered: that, in brief, the Pope enjoys, by divine institution, supreme, full, immediate, and universal power in the care of souls.

Struggle for Universal Power




வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.