1,44,000 பரிசுத்தவான்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 7:2 - ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன், அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
வெளிப்படுத்தின விசேஷம் 7:3 - நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
The upcoming trumpet judgments pertain to the Roman earth, the sea and the trees, so before God sends army after army against the Roman Empire, He is sealing His people so that they are not harmed.
To know the Seal of God, check out Seal of God
வெளிப்படுத்தின விசேஷம் 7:4 - முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன், இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:5 - யூதா கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:6 - ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:7 - சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:8 - செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
In God's plan, 12 is the number for government as observed in 12 tribes and 12 apostles.
வெளிப்படுத்தின விசேஷம் 2:9 - உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:9 - இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன், இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
ரோமர் 2:28 - ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
ரோமர் 2:29 - உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
ரோமர் 9:6 - தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது, ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.
ரோமர் 9:7 - அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே, ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.
ரோமர் 9:8 - அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.
கலாத்தியர் 3:29 - நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், அபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
கலாத்தியர் 6:16 - இந்த பிரமாணத்தின்படி நடந்து வருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.
- Physical Temple to Spiritual Temple (Mat 24:1-2, John 2:19-21, 1 Cor 3:16, 6:19)
- Physical Sacrifice to Spiritual Sacrifice (Prayer: Heb 13:15, 1 Pet 2:5, Hos 14:2, Psa 69:30-31)
- Physical Jerusalem to Heavenly Jerusalem (Rev 21:2,10; Heb 11:10, 12:22, 13:14, Gal 4:25-26)
- Physical Israel to Spiritual Israel (Rev 2:9, 3:9, Rom 2:28-29, 9:6-8, Gal 3:29, 6:16)
- Circumcision in flesh to Circumcision in heart (Romans 2:28-29)
- Incense to Prayers (Rev 8:3-4, Psa 141:2)
- 144 is the measurement, in cubits, of the wall of New Jerusalem
- It is a sqaure of 12 ie. 12 X 12 = 144
வெளிப்படுத்தின விசேஷம் 21:17 - அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்று நாற்பத்து நான்கு முழமாயிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21:14 - நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன, அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 12:1 - அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது, ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 1:20 - என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது, அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம், நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.
மல்கியா 2:7 - ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும். வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே. அவன் சேனைகளையுடைய கர்த்தரின் தூதன்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:12-13 - அதற்குப் பெரிதும் உயரமுமானமதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள், அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 14:4 - ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே, கற்புள்ளவர்கள் இவர்களே, ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே, இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
144,000 are called the Firstfruits unto God and hence it is a symbolic number, reflecting the 12 apostles.
- Even though All the Tribes of the children of Israel (Revelation 7:4) was mentioned, the tribe of Dan is missing and Ephraim is replaced by the name of Joseph for the tribes of Dan and Ephraim were the leaders of the Israelitish apostasy (Judges chapters 17 & 18), and the same were the patrons of the public idols in Dan and Bethel, in the time of the northern kingdom.
- These 144000 can't be Jews. They are ALL Christians as:
- Not All Tribes were named in this list: Dan & Ephraim are missing
- These 140000 were sealed at the end of the 6th Seal which is part of the Christian era.
- Since 10 Northern tribes were lost in the Assyrian Captivity and they had not returned to Israel to this day, this 144,000 can't have people from those 10 tribes.
- The Christian church, secured by the Seal of God, is figured under the type of Israel tribes, the 12 apostles aptly corresponding with the 12 tribes of Israel.
- To have the number of the beast signifies being of the people or followers of the beast. So, to bear the number of the apostles, signifies being the legitimate offspring of the apostles.
- The 144,000 are called virgins (Rev 14:4), and are praised on that account, because they had not defiled themselves with meretricious embraces. They coincide, therefore, with the meretricious times of the Babylonian harlot, with whom the kings and inhabitants of theearth committed fornication.
- Revelation 14:5 - And in their mouth was found no guile.
- 144,000 is the perfect representation of the Church (New Jerusalem).
In truth, all idolatry is lying, since it worships for God what is not God. Apostle Paul write in Romans.
ரோமர் 1:25 - தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
ஆமோஸ் 2:4 - மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்ப மாட்டேன். அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.
ஏசாயா 28:15 - நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம், வாதை பெரு வெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது, நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே.
எரேமியா 16:19-20 - என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள். மனுஷன் தனக்குத் தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.
வெளிப்படுத்தின விசேஷம் 21:8 - பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:27 - தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
செப்பனியா 3:13 - இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ் செய்வதில்லை. அவர்கள் பொய் பேசுவதுமில்லை. வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப் படுவதுமில்லை. அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள்.
The 144,000 sealed at the end of 6th Seal are Christians, who would escape the FOUR WINDS (wars and commotions) with help of God's seal (ownership) on them.